ஒக்டோபர் 03ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஒக்டோபர் 03ஆம் திகதி முதல், அதற்கு அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பொதுவாக சீரான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மற்றும் மத்திய மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
The Department of Meteorology forecasts that favorable atmospheric conditions for thundershowers in the evening will develop across most parts of the country starting from October 3rd for the following few days. Generally fair weather is expected in most areas, but moderate to strong winds (30-40 km/h) are anticipated in the western slopes of the central hills, Northern, North Central, North Western, Central provinces, and Trincomalee and Hambantota districts.