இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI), இலங்கை உட்பட பிராந்திய நாடுகளுடனான வர்த்தகப் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் (INR) பயன்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த முடிவின்படி, இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடியும். அத்துடன், இந்த நாடுகளுக்கு இந்திய ரூபாயிலேயே கடன்களை வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராந்திய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி அதன் முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்கு ஓர் உத்தியோகபூர்வ மாற்று வீதத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
The Reserve Bank of India (RBI) has decided to permit the use of the Indian Rupee (INR) for trade transactions with regional countries, including Sri Lanka, Nepal, and Bhutan. This move, which also includes providing loans in INR to these countries, aims to reduce reliance on the US Dollar in regional trade. The RBI also plans to introduce an official exchange rate for its key trading partners.