இந்தியா ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், மனைவி தன் கணவனைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடும்ப வாழ்க்கையில் மதுப் பழக்கமே எமனாக மாறியுள்ளதாகத் தெரிகிறது.
உயிரிழந்த 42 வயதுடைய கணவர், தனது முதல் மனைவி இறந்த பின்னர், 36 வயதுடைய இந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினர் இருவரும் சென்னை, ஜோன்ஸ் சாலையில் புதிதாகக் கட்டப்படும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவம் நடந்த முன்தினம் இரவு, இருவரும் சேர்ந்து அமர்ந்து மது அருந்தத் தொடங்கியுள்ளனர். போதை அதிகமான நிலையில், இருவருக்கும் இடையில் சண்டை வெடித்தது. சண்டையின் ஒரு கட்டத்தில் கணவர் மனைவியின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, திடீரென அருகில் இருந்த கத்தியை எடுத்து, கணவரின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதையடுத்து, காயம் அடைந்த கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால், கத்தி குத்துப்பட்ட இடத்தில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியதால், அவர் மீண்டும் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து, கணவனைக் கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மனைவியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
A 42-year-old man from Odisha, India, was fatally stabbed by his 36-year-old second wife during a drunken brawl in Chennai, where they both worked at a construction site. The couple started fighting after consuming alcohol, and when the husband began strangling his wife, she suddenly stabbed him in the neck with a knife. Though initially treated and sent home, the man later collapsed due to excessive bleeding and was pronounced dead at Royapettah Government Hospital, leading to the wife’s arrest on murder charges.