தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் மணிகண்டன், தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.
விக்ரம் வேதா, காலா போன்ற திரைப்படங்களில் தமது திறமையை வெளிப்படுத்திய இவர், ஜெய் பீம் படத்தின் மூலம் மிகுந்த பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த குட் நைட் மற்றும் இளைஞர்களை ஈர்த்த லவ்வர் படங்களும் அவரது திறமையை மேலும் முன்னிலைப்படுத்தின.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவுடன் இணைந்து மணிகண்டன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களின் மூலம் தனித்துவமான இயக்குனராக பெரும் கவனம் பெற்ற தியாகராஜா குமாரராஜா, தனது அடுத்த படத்தில் மணிகண்டனை ஹீரோவாகக் கொண்டு பணியாற்றவிருக்கிறார் என கூறப்படுகிறது.