கங்குவா படத்தை தொடர்ந்து, சூர்யா தனது 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் முடித்துள்ளார். அடுத்ததாக, அவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் 45-வது படத்தில் இணைவது உறுதியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
இந்தப் புதிய படத்துக்கு தொடர்பான முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், ஆறு படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் த்ரிஷா மீண்டும் ஒரே திரையில் இணையவுள்ளனர் என்பது ரசிகர்களுக்கு சிறப்பு தகவலாகும்.