இயக்குனர் அட்லீ தற்போது “பேபி ஜான்” என்ற ஹிந்தி படத்தை தயாரித்து வருகிறார், இது தமிழில் விஜய் நடித்த “தெறி” படத்தின் ஹிந்தி ரீமேக்காகும்.
பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனுக்காக அட்லீ சமீபத்தில் கபில் சர்மா ஷோவில் கலந்துகொண்டார். அப்போது கபில், அட்லீயின் தோற்றத்தை பற்றிய நகைச்சுவையான கருத்துகளை தெரிவிக்க, அதற்கு பதிலாக அட்லீ “ஒருவரது தோற்றத்தை பார்க்காமல், அவருடைய இதயம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து கருத்து தெரிவியுங்கள்” என கூறினார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கபில் சர்மா இவ்வாறு இனவெறி மற்றும் நிறவெறி கருத்துகள் கூறியதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கபில் சர்மா தனது X தளத்தில், “அட்லீயின் தோற்றத்தை பற்றி நான் எங்கு பேசினேன் என்பதை அந்த வீடியோவில் காட்டுங்கள், முழு வீடியோவை பார்த்து முடிவு செய்யுங்கள்” என பதிவு செய்துள்ளார்.