2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இதில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே, பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பிரதிவாதிகளின் வழக்கறிஞர், மரண