யாழ்ப்பாணம் வரணியில் ஐந்து பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் நிலைமை மோசமடைந்ததால் அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மாதிரிகளை சோதனை செய்ததில், அவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு மத்தியில், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைபிடித்து தங்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.