Friday, October 24, 2025

இன்று 75 மில்லிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத் திசையில் வட தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The Department of Meteorology forecasts that the low-pressure area near the north coast of Sri Lanka is likely to intensify into a depression within the next 12 hours and is expected to move northwest towards the North Tamil Nadu coast. Intermittent rain or thundershowers are likely in the Western, Sabaragamuwa, Central, and North Western provinces, and in the Galle and Matara districts, with some areas expecting fairly heavy rainfall of about 75 mm. Rain will occur on several occasions in the Northern Province. Thundershowers are also likely in many places in the Uva Province and the Batticaloa and Ampara districts after 1:00 PM. Fairly strong winds (30-40 kmph) are anticipated in the western slopes of the Central hills, and in the Western, Northern, North Central, North Western, Southern, and Trincomalee districts. The public is advised to take precautions against strong winds and lightning during thundershowers.

Hot this week

கல்வி நடவடிக்கைகளில் வரும் பெரிய மாற்றங்கள்

அடுத்தாண்டு அமுலாகவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பூர்வாங்க ஆலோசனைக் கோவை...

Vacancy Female office employees

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

யாழில் நிமோனியா தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி...

கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்களுக்கு அதிர்ச்சி: கைப்பேசிகள் மர்மமாக மாயம்

அக்குறணையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத்...

பாராளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டது

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...

Topics

110 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம்...

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம்...

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img