“2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1,25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55% க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார சிரமங்களை அனுபவித்ததாக அவர் கூறினார். குறிப்பாக கிராமப்புறம் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.”