ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அதிகாலையில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் நேற்று (அக்டோபர் 30) ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிர சோதனை
அதன்படி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கிய மற்றும் தப்பிச் செல்வதற்கு உதவிய சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டு, ஹிரண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 40 வயதுடைய மொறவின்ன, பாணந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
One suspect has been arrested in connection with a shooting incident in the Malamulla area of the Hirana Police Division, where an unidentified duo on a motorcycle opened fire with a T56 rifle during a party in the early hours of the morning, resulting in one death and one injury. The suspect was arrested yesterday (the 30th) in the Malamulla area. Police stated that the arrested individual, a 40-year-old man from Moravinna, Panadura, was apprehended for providing accommodation and assisting the main suspects in their escape. Hirana Police are conducting further investigations.

 
                                    
