வங்கிகளில் 3 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிலையான வைப்பு வைத்துள்ளவர்களும் அஸ்வெசும நிவாரணத் தொகையை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், தென் மாகாண காணி ஆணையாளர் சேனக பள்ளிகுருகே இந்த விவரத்தை வெளியிட்டார். குறிப்பாக, சில பயனாளிகள் நிவாரணத் தொகை பெறும் வங்கியிலேயே நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் வங்கி மேலாளர்களும் அதிகாரிகளும் தகவல் வழங்க முடியும் என்று கூறப்பட்டதால், விரைவில் இதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, அனைத்து பயனாளர்களின் தகவல்களும் ஆய்வு செய்யப்படும் என உறுதியளித்தார். மாத்தறை மாவட்டத்தில் உள்ள 53,000 காப்புறுதி பயனாளர்களின் தகவல்களும் புதுப்பித்து, அதற்கான அறிக்கையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.