தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான நிலையில் செயற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்குக் கடலில் மிதந்த நிலையில் கைப்பற்றப்பட்ட, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த நீரை அருந்திய மூன்று நாய்கள், ஒரே இடத்தில் சுற்றும் காட்சியைக் கண்டு மக்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த நாய்கள் ‘ஐஸ்’ போதைப்பொருள் கலந்த நீரைப் பருகியதால் இவ்வாறு வழமைக்கு மாறாகச் செயற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் வழமையாகச் சுற்றித்திரியும் அந்த நாய்கள் நேற்று அப்பகுதிகளில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்குக் கடலில் மிதந்த நிலையில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகளை, இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (14) கைப்பற்றி தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The public at the Tangalle Fisheries Harbour reported unusual behaviour from three dogs that had allegedly consumed water contaminated with the drug ‘Ice’ (Crystal Methamphetamine), causing them to spin in one place. These dogs were near an area where the Sri Lanka Navy had stored 51 packets of illegally smuggled narcotics recovered floating in the Southern Sea on Tuesday (the 14th), and the affected dogs were reportedly not seen in the area yesterday.