Saturday, October 18, 2025

அதிவேக வளர்ச்சி: 2025 இல் 1.8 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைத் தாண்டியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 75,657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்த நிலையில், இதுவரை வருகை தந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,801,151 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். அவர்களின் எண்ணிக்கை 4 இலட்சம் எல்லையை நெருங்கி, 396,274 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், ஐக்கிய இராச்சியம் (167,886), ரஷ்யா (125,950), ஜேர்மனி (111,677) மற்றும் சீனா (108,040) ஆகிய நாடுகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு வருகை தந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, பிரான்ஸ் (90,250), அவுஸ்திரேலியா (81,040), நெதர்லாந்து (53,922) மற்றும் அமெரிக்கா (50,027) போன்ற நாடுகளிலிருந்தும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இத்தாலி (39,932), கனடா (37,606), ஸ்பெயின் (36,430), போலந்து (36,389) ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு (2024) 20 இலட்சத்திற்கும் (2,053,465) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இலங்கைக்கு இறுதியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டு 2018 ஆகும். அப்போது 23 இலட்சத்திற்கும் (2,333,796) அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை இதுவரை 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் 20 இலட்சம் எல்லையைக் கடந்துள்ளது.

The Sri Lanka Tourism Development Authority (SLTDA) announced that the total number of foreign tourist arrivals to the country in 2025 has surpassed 1.8 million as of October 15, reaching 1,801,151. The highest number of arrivals were from India (396,274), nearly hitting the 400,000 mark. Four other countries—UK, Russia, Germany, and China—also registered over 100,000 arrivals. The report notes that tourist arrivals previously crossed the 2 million mark in 2016, 2017, 2018, and 2024, with the highest figure recorded in 2018 (2.33 million).

Hot this week

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அதிரடி அறிவிப்பு வெளியீடு!

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து...

வியக்கும் தாயின் பாசம்; மகனுக்கு புதிய உயிர் வழங்கிய தாய்

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை...

மீண்டும் எச்சரிக்கை: 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின்...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சிச் செய்தி!

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள்...

அதிரடி மீட்பு: 30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்களின் தொகுதியுடன் ஒருவர் சந்தேகநபராக...

Topics

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கொடூரத் தாக்குதல்!

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் கிரிக்கெட் சங்கம், மனித...

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img